Sunday, February 20, 2011

உங்கள் நேரம் எப்படி செலவாகின்றது துல்லியமாக கண்டுபிடிக்கலாம்


Time Management பற்றி தினமும் ஒரு புத்தகம் வெளி வந்து
கொண்டிருந்தாலும் இதை நடைமுறையில் கடைபிடிப்பது
நம்மால் தொடர்ச்சியாக செய்யமுடியாத ஒன்றாக இருந்து
வருகிறது. இந்தப்பிரச்சினைக்கு தீர்வாக ஒரு தளம் உள்ளது
இந்ததளத்தில் இருந்து நம் நேரம் எப்படி செலவாகிறது ,
நம் நேரத்தை பயனுள்ள வகையில் எப்படி பயன்படுத்தாலாம்
என்பதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
எந்த ஒரு செயலையும் பேப்பரில் எழுதி வைத்து செய்தால்
நடைமுறை படுத்துவது எளிது என்று நாம் கேள்விபட்டிருக்கிறோம்,
அதே போல் தான் நேரமேலாண்மை என்பதை ஆன்லைன் மூலம்
நாம் காலையில் எழுவதில் இருந்து சாப்பிடும் நேரம் முதல்
அனைத்தையும் இணையத்தில் சேமித்து வைத்து எதற்கு நமக்கு
அதிகமான நேரம் எடுத்துக்கொள்கிறது என்பதை துல்லியமாக
அறியலாம். நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://colorhat.com/welcome
இந்தத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி Sign up என்ற
பொத்தானை சொடுக்கி நமக்கென்று ஒரு இலவச பயனாளர்
கணக்கு உருவாக்கி நாம் செலவழிக்கும் நேரத்தை கொடுக்கலாம்.
காரணமே இல்லாமல் எவ்வளவு நேரம் ஒரு நாளைக்கு
செலவாகிறது என்பதை நாம் கிராப்-ல் பார்க்கும் போது நமக்கு
நேரத்தின் முக்கியத்துவம் தெரியும்.குழந்தைகள் முதல் பிஸினஸ்
செய்யும் நண்பர்கள் வரை அனைவரும் இது போன்ற தளத்தின்
மூலம் தங்களது நேரம் எப்படி செலவாகிறது என்பதையும்
எப்படி நேரத்தை பயன்படுத்திக்கொள்வது என்பதைப்பற்றிய
ஒரு தெளிவான அனுகுமுறை கிடைக்கும். கண்டிப்பாக
இந்தப்பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

No comments:

Post a Comment