Monday, February 21, 2011

மின்னல் வேக தேடியந்திரம் போர்லுக்




போர்லுக் புதிய தேடியந்திரம் தான்.ஆனால் கூகுலுக்கு போட்டியானது அல்ல.கூகுல் உள்ளிட்ட பல தேடியந்திரங்களில் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் தேட உதவும் தேடியந்திரம் இது.
இத்தகைய தேடியந்திரங்களுக்கும் குறைவில்லை தான்.இருப்பினும் போர்லுக் கூகுலை போலவே எளிமையாக இருக்கிறது.இதை விடை சுலபமாக பல தேடியந்திர தேடலை பயன்படுத்த முடியாது என்று சொல்லக்கூடிய அளவுக்கு மிக மிக எளிதாக தேடல் சேவையை வழங்குகிறது போர்லுக்.
சொல்லப்போனால் இதன் முகப்பு பக்கம் கூகுலை விட எளிமையாக இருக்கிறது.ஒரே ஒரு தேடல் கட்டம்.அதன் இடது பக்க்த்தில் போர்லுக் என்னும் பெயர்.அவ்வளவு தான்.வேறு எந்த அமசங்களும் ககிடையாது.
ஆனால் தேடல் கட்டத்தில் டைப் செய்த பிறகு தான் சின்னதாக அற்புதம் அரங்கேறுகிறது.உண்மையில் டைப் செய்யும் போதே அற்புதம் ஆரம்பமாகி விடுகிறது.
முதல் எழுத்தை அடிக்க துவங்கியதுமே தேடப்படும் சொல் இதுவாக தான் இருக்கும் என்ற கணிப்பில் அந்த சொல்லுக்கு உரிய தேடல் முடிவுகள் அணிவகுக்கின்றன.பொருந்தக்கூடிய பிற சொற்களும் கொடுக்கப்படுகின்றன.
அந்த கணிப்பு சரியானது என்றால் தேடல் முடிவுகளை பரிசிலிக்க துவங்கி விடலாம். இல்லை என்றால் நாம் தேட உத்தேசித்த சொல்லை முழுவதும் அடித்து தேடலாம்.
முதலில் வரும் தேடல் முடிவுகளில் திருப்தி அடைய வேண்டும் என்றில்லை.கூகுலின் போட்டி தேடியந்திரமான பிங் மற்றும் யூடியூப்,டெலிசியஸ்,பேஸ்புக்,டிவிட்டர்,பிலிக்கர் போன்ற சேவைகளையும் பயன்படுத்தி தேடிப்பார்க்கலாம்.
இந்த சேவை ஒன்றும் புதிதல்ல,கூகுல் இத்தகைய உடனடி சேவையை வழங்கி வருகிறது.ஆனால் அதனை மிக அழகாக இந்த தேடியந்திரம் தருகிறது.
தேடல் முடிவு பட்டியலின் இடது பக்கத்தில் முதலில் கூகுலும் அதனை தொடர்ந்து மற்ற சேவைகளும் வரிசையாக இடம்பெறுகின்றன.
ஐடியூன்ஸ் மூலம் பாடல்களையும் மேப்ஸ் மூலம் வரைபடங்களையும் தனியே தேடலாம்.நாடுகளுக்கான தனித்தனி பட்டியலும் இடம்பெறுகின்றன.
செய்திகள்,புகைப்படங்கள்,விடியோ என தனித்தனியே தேடிக்கொள்ளும் வசதியை தரும் தேடியந்திரங்கள் எல்லாவற்றையும் விட அதிக சிக்கல் இல்லாமல் குறுக்கீடுகள் இல்லாமல் இந்த சேவை மிகவும் அளிமையாக இருக்கிறது.
அந்த வகையில் மிகச்சிறந்த உடனடி தேடியந்திர சேவை என்று இதனை வர்ணிக்கலாம்.
கூகுலை தவிர வேறு எந்த தேடியந்திரத்தையும் பயன்படுத்த மாட்டோம் என்று பிடிவாதமாக இருப்பவர்கள் கூட இதனை ஒரு முறை பயன்படுத்தி பார்க்கலாம்.எப்படியும் இந்த தேடியந்திரம் முதலில் முன்வைப்பது கூகுல் தரும் முடிவுகளை தான்.

நன்றி: http://cybersimman.wordpress.com

No comments:

Post a Comment