Wednesday, March 9, 2011

எக்சசைஸ் செய்து உடலை வலிமையாக்கலாம் வீடியோவுடன் சொல்லும் தளம்

நம் உடலை எக்சசைஸ் செய்து ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள
வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு எந்த எக்சசைஸ் நம் உடலை
பெரிய அளவில் பாதிக்காது என்பதையும் ஒவ்வொரு Exercise எப்படி
செய்ய வேண்டும் என்பதையும் எளிதாக ஆன்லைன் மூலம்
தெரிந்து கொள்ளலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
எடை தூக்குவதில் தொடங்கி ஓட்டம், மரம் ஏறுதல் என்று அனைத்து
விதமான எக்சசைஸ் பயிற்சிகளையும் வீடியோவுடன் பார்த்தால்
எக்சசைஸ் செய்யாத நமக்கும் எக்சசைஸ் மேல் ஒரு விருப்பத்தை
கொண்டுவருவதற்கு உதவியாக ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://www.crossfit.com
குழந்தைகள் எந்த வகையான எக்சசைஸ் செய்ய வேண்டும்,
இளைஞர்கள், நோயாளிகள் எந்த வகையான எக்சசைஸ் செய்ய
வேண்டும் என்று துல்லியமாக சொல்கின்றனர். இந்தத்தளத்திற்கு
சென்று ஒவ்வொருவரும் எப்படி தங்கள் உடலை எக்சசைஸ்
செய்து வலிமையாக்குகின்றனர் என்பதை வீடியோவுடன்
பார்க்கலாம். உலகின் அனைத்து நாடுகளிலும் எக்சசைஸ் எப்படி
செய்கின்றனர், வீட்டில் இருக்கும் உபகரணங்களை வைத்து எப்படி
திறம்பட எக்சசைஸ் செய்யலாம் என்பதையும் அனைவருக்கும்
புரியும்படி சொல்கின்றனர். நாம் வீடியோவை பார்ப்பதோடு மட்டும்
இல்லாமல் எக்சசைஸ் செய்யும் வீரரிடம் கேட்க வேண்டிய
கேள்விகளை நேரடியாக கேட்கலாம், உங்கள் கேள்விகளுக்கு
அவர்களிடம் இருந்து உடனடியாக பதில் வரும். பெரிய அளவில்
உடற்பயிற்சி கூடம் வைத்து நடத்துபவர்கள் இதைப்போன்ற
வீடியோவை காப்பி செய்து சில ஆயிரத்துக்கும் விற்கின்றனர்,
இந்ததளத்திற்கு சென்று நாம் அனைத்து வீடியோவையும்
இலவசமாக பார்க்கலாம். உடலை Fit ஆக வைத்துக்கொள்ள
விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

No comments:

Post a Comment