Sunday, January 16, 2011

வீடியோகேற்றவாறு சப்டைட்டில் சரி செய்ய


தற்போது நாம் இணையத்தில் டவுன்லோட் செய்யும் அனைத்து திரைப்படங்களுக்கும் சப்டைட்டில் கிடைக்கிறது.இப்போது பலரும் சப்டைட்டிலோடு படம் பார்ப்பது வழக்கமாகிவிட்டது. வீடியோகேற்றவாறு சப்டைட்டில் சரி செய்ய பல மென்பொருள்கள் உள்ளன.ஆனாலும் நாம் மென்பொருளை வைத்து என்ன தான் முன்னே பின்னே சப்டைட்டிலை சரி செய்தாலும் சில சப்டைட்டில் சரியாக பொருந்தாது.இவ்வகை சப்டைட்டிலை எவ்வாறு சரி செய்வது என பார்ப்போம்.

Subtitle Tool - submagic சப்டைட்டில் மென்பொருளான இதை டவுன்லோட் செய்து கொள்ளவும்.

சப்டைட்டிலும் , வீடியோவும் பொருந்தாதற்கு காரணம் வீடியோவின் Frame Rate மற்றும் சப்டைட்டில் Frame Rate வேறு வேறாக இருப்பதே காரணம்.சப்டைட்டில் Frame Rate நீங்கள் சப்டைட்டில் டவுன்லோட் செய்யும் இணைய தளத்திலேயே கொடுக்க பட்டிருக்கும்.வீடியோவின் Frame Rate காண கீழ்க்கண்ட வழிமுறையை பின்பற்றவும்.

வீடியோவை Right Click செய்து Properties தேர்வு செய்க.தோன்றும் திரையில் Summary என்பதை தேர்வு செய்க.தோன்றும் திரையில் Frame Rate குறித்து கொள்க


பொதுவாக 23.976 அல்லது 25 ஆகிய இரு Frame Rateகளில் வீடியோ கோப்புகள் இருக்கும்.மேற்கண்ட திரையில் 23 என இருப்பதை நீங்கள் 23.976 என எடுத்து கொள்ளலாம்.உங்கள் வீடியோவும் சப்டைட்டிலும் ஒரே Frame Rate இல் இருக்க வேண்டும்.உங்கள் வீடியோ 25 Frame Rate என கொள்வோம்,சப்டைட்டில் 23.976 Frame Rateல் இருப்பதாக கொள்வோம்.


Subtitle Tool - submagic சப்டைட்டில் மென்பொருளை திறந்து கொள்க.அதில் உங்கள் சப்டைட்டிலை திறந்து கொள்க.பின் FrameRate என்னும் பட்டையை கிளிக் செய்க.தோன்றும் திரையில் புதிய frame rate அதாவது 25 கொடுத்து convert என்பதை கிளிக் செய்க.(கீழே உள்ள படத்தை பார்க்க).



இப்போது உங்கள் சப்டைட்டில் உங்கள் வீடியோவோடு பொருந்துமாறு மாறி இருக்கும்.


நன்றி : http://browseall.blogspot.com/2011/01/blog-post.html

No comments:

Post a Comment