என்றாவது உங்கள் ஜிமெயில் கணக்கை திடீரென யாரவது முடக்கினாலோ அல்லது ஏதோ ஒரு காரணத்தினாலோ உங்கள் மெயில்கள் அழிந்து போனாலோ அல்லது உங்களால் மெயில்களை பார்க்க முடியாமல் போனாலோ நமக்கு இழப்பு தான்.இதற்கு நாம் உங்கள் ஜிமெயில்களை பேக்அப் எடுத்து கொண்டால் கவலையின்றி இருக்கலாம்.
Gmail Backup என்னும் இலவச மென்பொருள் இதற்கு பெரிதும் உதவுகிறது.உங்கள் மெயில்களை பேக்அப் எடுத்து கொண்டு வேறு ஒரு ஜிமெயில் கணக்குக்கு கூட மாற்றி கொள்ளலாம்.இந்த மென்பொருளை பயன் படுத்துவதற்கு முன்னர் உங்கள் ஜிமெயில் கணக்கில் IMAP என்னும் வசதியை Enable செய்ய வேண்டும்.
இதற்கு Setting -> Forwarding and POP/IMAP செல்க. பின் Enable IMAP என்பதை தேர்வு செய்க
இதன் பிறகு நிறுவிய Gmail Backup மென்பொருளுக்கு சென்று உங்கள் மெயில் முகவரி,பாஸ்வோர்ட் கொடுத்து Directory என்பதை கிளிக் செய்து உங்கள் கணிணியில் பேக்அப் ஆக வேண்டிய இடத்தை தேர்வு செய்க.எந்த தேதியிலிருந்து மெயில்கள் வேண்டுமோ அதையும் குறிப்பிட்டு கொள்ளலாம். கடைசியாக Backup என்ற பட்டனை சொடுக்கினால் உங்கள் மெயில்கள் பதிவிறங்க ஆரம்பித்து விடும்.
வேறொரு கணக்கில் இந்த மெயில்களை சேமிக்க விரும்பினால் அந்த கணக்கின் விபரங்களை கொடுத்து, கணிணியில் பேக்அப் இருக்கும் இடத்தை தேர்வு செய்து Restore என்ற பட்டனை சொடுக்கினால் மெயில்கள் அந்த கணக்கில் சேர்ந்து விடும்.
ஜிமெயிலில் இருக்கும் label வசதியையும் சேர்ந்து பேக்அப் எடுக்கும் வசதியை கொண்டுள்ளது.இந்த மென்பொருள் windows மற்றும் linux இரண்டுக்கும் கிடைக்கிறது.
டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்க
நன்றி : http://browseall.blogspot.com/2011/01/backup-gmail.html
No comments:
Post a Comment