Monday, January 17, 2011

Suthanthira-menporul டாப் 4 – இன்ஃப்ரா ரெக்காடர் இலவச மென்பொருள்.

சிடி(CD) மற்றும் டிவிடி(DVD) டிஸ்க் போன்றவற்றில் தகவல்களை
பதிந்து கொள்ள பெரும்பாலன மக்கள் பயன்படுத்தும் Nero
மென்பொருளுக்கு இணையாக ஒரு இலவச மென்பொருள் உள்ளது
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

Secondary storage device என்று சொல்லப்படும் சிடி மற்றும்
டிவிடி டிஸ்குகள் மீது தகவல்களை எளிதாக பதிந்து கொள்வதற்கு
வசதியாகவும், அதிக பிழைச்செய்தி கூறாமலும் பயன்படுத்துவதற்கு
எளிதாகவும் உள்ளவாறு ஒரு இலவச மென்பொருள் உள்ளது.
மென்பொருளின் பெயர் இன்ஃப்ரா ரெக்காடர் (InfraRecorder)
அனைத்துவிதமான CD மற்றும் DVD Format-க்கும் துணை
செய்கிறது.Multi-session disc மற்றும் dual-layer DVD போன்றவற்றிகும்
ஆடியோ சிடி,  ISO , BIN/CUE , போன்ற அத்தனை வகைகளுக்கும்
துணைபுரியும் வகையில் இருக்கிறது. drag and drops முறையில்
எளிதாக தகவல்களை தேர்ந்தெடுக்கலாம். சில சமயங்களில் CD
அல்லது DVD க்களில் Read பிரச்சினை இருந்தாலும் நாம் இந்த
மென்பொருளை பயன்படுத்தி மற்றொரு டிஸ்கிற்கு தகவல்களை
மாற்றிக்கொள்ளும் வசதியும் இருக்கிறது. கண்டிப்பாக இந்த
இலவச மென்பொருள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
Download என்பதை சொடுக்கி மென்பொருளை தரவிரக்கிக்
கொள்ளவும்.
Download

Suthanthira menporul டாப் 3 – போட்டோஷாப் -க்கு இணையான இலவச மென்பொருள்.


புகைப்படங்களை வைத்து செய்யும் அனைத்து வேலைகளுக்கும் நாம்
பயன்படுத்தும் போட்டோஷாப் மென்பொருளுக்கு இணையான
மற்றொரு இலவச மென்பொருள் உள்ளது இதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.

புகைப்படங்களின் நீள அகலத்தை மாற்றுவதில் தொடங்கி கருப்பு
வெள்ளை புகைப்படத்தை கலர் புகைப்படமாக மாற்றுவது வரை
அனைத்து புகைப்பட வேலைகளுக்கும் அடோப் நிறுவனத்தில்
இருந்து வெளிவரும் வரும் போட்டோஷாப் மென்பொருளைத்தான்
பயன்படுத்துகிறோம் ஆனால் இந்த கட்டண மென்பொருளுக்கு
மத்தியில் இதில் செய்யும் அத்தனை வேலைகளையும் செய்ய
ஒரு இலவச மென்பொருள் உள்ளது.

Suthanthira menporul  டாப் 3ல் அதிகமான மக்கள் பயன்படுத்தும்
இந்த மென்பொருளின் பெயர் Gimp. இலவசமாக கிடைக்கும் இந்த
மென்பொருளை பயன்படுத்தி புகைப்படத்தில் செய்யப்படும் அனைத்து
வேலைகளையும் செய்யலாம். குறிப்பாக போட்டோஷாப் மென்பொருள்
உருவாக்கும் PSD கோப்பை கூட நாம் இந்த மென்பொருளில்
பயன்படுத்தலாம். புகைப்பட வேலைகள் செய்யும் அனைவருக்கும்
இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும். Download என்பதை சொடுக்கி
மென்பொருளை இலவசமாக தரவிரக்கி பயன்படுத்தலாம்.
Download

நன்றி : விண்மணி

Suthanthira ilavasa menporul ( சுதந்திர இலவச மென்பொருள் ) டாப் 2 வீடியோ எடிட்டிங்


சுதந்திர இலவச மென்பொருளில் நாம் இன்று பார்க்க இருப்பது
வீடியோ எடிட்டிங் செய்ய உதவும் மென்பொருள் இதைப்பற்றித்
தான் இந்தப்பதிவு.

Suthanthira ilavasa menporul  டாப் 10 – ல் இரண்டாம் இடம்
பிடித்திருக்கும் மென்பொருள் வீடியோ எடிட்டிங் வேலை செய்ய
உதவுகிறது. மென்பொருளின் பெயர் அவேய்ட் மக்ஸ் (Avide mux ).
சாதாரணமாக வீடியோ எடிட்டிங் செய்ய வேண்டும் என்றால்
பெரிய அளவில் காசு கொடுத்து வீடியோ எடிட்டிங் மென்பொருள்
வாங்குவோம் ஆனால் எளிய முறையில் இலவசமாக கிடைக்கும்
இந்த மென்பொருளை பயன்படுத்தலாம். வீடியோவில் விரும்பிய
பகுதியை வெட்டி (Cut) தனிப்பகுதியாக சேமித்து வைக்கலாம்.
வீடியோவில் இருக்கும் கலர், பிரைட்னஸ் , போன்றவற்றை
மாற்றலாம். வீடியோவிற்கு விரும்பிய ஆடியோவை சேர்க்கலாம்.

AVI, DVD , MPEG ,MP4  மற்றும் பல Format- களுக்கு துணைபுரிகிறது.
Noise இருந்தால் அதையும் நீக்கலாம்.வீடியோவிற்கு Title
தேவையென்றால் அதுவும் சேர்த்துக்கொள்ளலம். வீடியோவின்
நீள அகலங்களை நாம் விரும்பியபடி மாற்றி அமைக்கலாம்.
இப்படி  வீடியோ எடிட்டிங் வேலைகளை செய்ய உதவும் இந்த
இலவச மென்பொருள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
Download 

நன்றி : விண்மணி

suthanthira ilavasa menporul ( சுதந்திர மென்பொருள் ) இலவசமாய் தரவிரக்கலாம்.



பிரம்மாண்டமான மென்பொருளுக்கு மத்தியில் அது செய்யும் அதே
வேலையை இலவசமாய் செய்ய பல மென்பொருள்கள் உள்ளது
இதில் உலகஅளவில் அதிகமான மக்கள் பயன்படுத்தும்
suthanthira ilavasa menporul ( சுதந்திர இலவச மென்பொருள் ) என்ன
என்பதையும் அதை அனைத்து மக்களும் எப்படி இலவசமாய்
தரவிரக்கி பயன்படுத்தலாம் என்பதைப் பற்றியும், சுதந்திர இலவச
மென்பொருளில் முதல் 10 இடம் பெறும் மென்பொருள்களை
தனித்தியாக அதன் பயன்களுடன் பார்க்க இருக்கிறோம் இன்று
டாப் 10 -ல் முதலிடம் பெறும் மென்பொருளை பற்றி பார்க்கலாம்.

டாப் 10 -ல் முதல் முத்தான இடம் பெற்றிருக்கும் மென்பொருள் பற்றி
சொல்ல வேண்டுமென்றால் அலுவலக வேலைகளுக்கும், கிராப், மேப்
போன்றவை வரைவதற்கும் நாம் பயன்படுத்தும் Microsoft Visio போன்ற
ஒரு மென்பொருள். மைக்ரோசாப்ட் விசியோவில் என்னவெல்லாம்
செய்ய முடியுமோ அதை எல்லாம் நாம் இந்த இலவச மென்பொருள்
கொண்டு செய்யலாம். மென்பொருளின் பெயர் Dia (டயா). கணினித்
துறையில் Flow Chart ,Entity relationship diagrams, UML diagrams,
Network diagrams Circuit போன்ற வேலைகளுக்கு இந்த மென்பொருள்
பயனுள்ளதாக இருக்கும். இந்த இலவச மென்பொருளை Download
என்பதை சொடுக்கி தரவிரக்கிக் கொள்ளலாம்.
Download

நன்றி : விண்மணி

பயர்பாக்ஸ் எழுத்துருவை மாற்ற

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசருக்குப் பதிலாக, வேறு ஒரு பிரவுசரைப் பயன்படுத்த எண்ணுபவர்கள், கையில் எடுப்பது பயர்பாக்ஸ் பிரவுசரைத்தான். தொடர்ந்து தன் வாடிக்கையாளர் எண்ணிக்கையைப் பெருக்கு வருவதும் இந்த பிரவுசரில்தான். பொதுவாக, இது போன்ற அப்ளிகேஷன் புரோகிராம் ஒன்றில், அதன் பயனாளர் இடைமுகம் (User Interface) கொண்டுள்ள எழுத்து வகையினை மாற்ற முடியாது. ஏன், அளவை மாற்றுவது கூடச் சற்று கடினமான செயலாகும். பயர்பாக்ஸ் பிரவுசரைப் பொறுத்தவரை, அதற்கென அமைக்கப்பட்ட ஆட் ஆன் எனப்படும் கூட்டுத் தொகுப்புகள் ஏராளம். அத்தகைய தொகுப்பு ஒன்று, பயர்பாக்ஸ் பிரவுசரின் இடைமுகத்தில் நமக்குப் பிடித்த எழுத்து வகையினை அமைக்க உதவிடுகிறது. எழுத்துவகையினை மாற்றாவிட்டாலும், அதன் அளவைப் பெரிதாக்கவும் உதவுகிறது. இதனால், சற்று பார்வைத் திறன் குறைவு உள்ளவர்கள், பலனடையலாம்.
இந்த ஆட் ஆன் தொகுப்பின் பெயர் Theme Font and Size Changer.
இதன் தளம் (https://addons.mozilla.org/enUS/firefox/addon/162063/) சென்று, இதனை இன்ஸ்டால் செய்துவிட்டால், பயர்பாக்ஸ் ஸ்டேட்டஸ் பாரில், அல்லது ஆட் ஆன் பாரில் (பயர்பாக்ஸ் பதிப்பு 4) ஐகான் ஒன்று அமைக்கப்படுகிறது. இதன் மீது லெப்ட் கிளிக் செய்தால், எளிய மெனு ஒன்று திறக்கப்படுகிறது. இதில் பல கீழ் விரி மெனுக்கள் தரப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் நாம் விரும்பும் எழுத்து வகையை, விரும்பும் அளவில், பயர்பாக்ஸின் இடை முகத்திற்கென அமைக்கலாம். இந்த தொகுப்பு எழுத்து வகைகளுக்கான தகவல்களை, நேரடியாக விண்டோஸ் சிஸ்டத்தின் பாண்ட்ஸ் போல்டரிலிருந்து எடுத்துக் கொள்கிறது. இதில் உள்ள Normal என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், பிரவுசரின் தொடக்கத்தில் தரப்பட்ட எழுத்து வகை மீண்டும் அமைக்கப்படுகிறது. எழுத்து வகை மாறிய பின்னர், அது பிரவுசரின் மெனுக்கள், டூல்பார்கள், விண்டோஸ் மற்றும் பிரவுசரின் கிராபிக்ஸ் யூசர் இன்டர்பேஸ் அமைப்புகளை மாற்றுகிறது. இணைய தளங்களின் எழுத்துக் களையோ, மற்ற அம்சங்களையோ மாற்றுவதில்லை. இந்த எக்ஸ்டன்ஷன் இயக்கத்தினை மொஸில்லாவின் இமெயில் கிளையண்ட் புரோகிராமான தண்டர்பேர்ட் தொகுப்பிலும் அமைக்கலாம். தண்டர்பேர்ட் தொகுப்பிற்கு மட்டும் அமைக்க விரும்புவர்கள் அதற்கான ஆட் ஆன் தொகுப்பினை https://addons.mozilla.org/enUS/thunderbird/addon/ 162063/ என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நன்றி : தினமலர் கம்ப்யூட்டர் மலர்