Monday, January 17, 2011

suthanthira ilavasa menporul ( சுதந்திர மென்பொருள் ) இலவசமாய் தரவிரக்கலாம்.



பிரம்மாண்டமான மென்பொருளுக்கு மத்தியில் அது செய்யும் அதே
வேலையை இலவசமாய் செய்ய பல மென்பொருள்கள் உள்ளது
இதில் உலகஅளவில் அதிகமான மக்கள் பயன்படுத்தும்
suthanthira ilavasa menporul ( சுதந்திர இலவச மென்பொருள் ) என்ன
என்பதையும் அதை அனைத்து மக்களும் எப்படி இலவசமாய்
தரவிரக்கி பயன்படுத்தலாம் என்பதைப் பற்றியும், சுதந்திர இலவச
மென்பொருளில் முதல் 10 இடம் பெறும் மென்பொருள்களை
தனித்தியாக அதன் பயன்களுடன் பார்க்க இருக்கிறோம் இன்று
டாப் 10 -ல் முதலிடம் பெறும் மென்பொருளை பற்றி பார்க்கலாம்.

டாப் 10 -ல் முதல் முத்தான இடம் பெற்றிருக்கும் மென்பொருள் பற்றி
சொல்ல வேண்டுமென்றால் அலுவலக வேலைகளுக்கும், கிராப், மேப்
போன்றவை வரைவதற்கும் நாம் பயன்படுத்தும் Microsoft Visio போன்ற
ஒரு மென்பொருள். மைக்ரோசாப்ட் விசியோவில் என்னவெல்லாம்
செய்ய முடியுமோ அதை எல்லாம் நாம் இந்த இலவச மென்பொருள்
கொண்டு செய்யலாம். மென்பொருளின் பெயர் Dia (டயா). கணினித்
துறையில் Flow Chart ,Entity relationship diagrams, UML diagrams,
Network diagrams Circuit போன்ற வேலைகளுக்கு இந்த மென்பொருள்
பயனுள்ளதாக இருக்கும். இந்த இலவச மென்பொருளை Download
என்பதை சொடுக்கி தரவிரக்கிக் கொள்ளலாம்.
Download

நன்றி : விண்மணி

No comments:

Post a Comment