Monday, January 17, 2011

Suthanthira-menporul டாப் 4 – இன்ஃப்ரா ரெக்காடர் இலவச மென்பொருள்.

சிடி(CD) மற்றும் டிவிடி(DVD) டிஸ்க் போன்றவற்றில் தகவல்களை
பதிந்து கொள்ள பெரும்பாலன மக்கள் பயன்படுத்தும் Nero
மென்பொருளுக்கு இணையாக ஒரு இலவச மென்பொருள் உள்ளது
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

Secondary storage device என்று சொல்லப்படும் சிடி மற்றும்
டிவிடி டிஸ்குகள் மீது தகவல்களை எளிதாக பதிந்து கொள்வதற்கு
வசதியாகவும், அதிக பிழைச்செய்தி கூறாமலும் பயன்படுத்துவதற்கு
எளிதாகவும் உள்ளவாறு ஒரு இலவச மென்பொருள் உள்ளது.
மென்பொருளின் பெயர் இன்ஃப்ரா ரெக்காடர் (InfraRecorder)
அனைத்துவிதமான CD மற்றும் DVD Format-க்கும் துணை
செய்கிறது.Multi-session disc மற்றும் dual-layer DVD போன்றவற்றிகும்
ஆடியோ சிடி,  ISO , BIN/CUE , போன்ற அத்தனை வகைகளுக்கும்
துணைபுரியும் வகையில் இருக்கிறது. drag and drops முறையில்
எளிதாக தகவல்களை தேர்ந்தெடுக்கலாம். சில சமயங்களில் CD
அல்லது DVD க்களில் Read பிரச்சினை இருந்தாலும் நாம் இந்த
மென்பொருளை பயன்படுத்தி மற்றொரு டிஸ்கிற்கு தகவல்களை
மாற்றிக்கொள்ளும் வசதியும் இருக்கிறது. கண்டிப்பாக இந்த
இலவச மென்பொருள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
Download என்பதை சொடுக்கி மென்பொருளை தரவிரக்கிக்
கொள்ளவும்.
Download

No comments:

Post a Comment