Monday, January 17, 2011

யு.எஸ்.பி.க்கான மின்சக்தி

புதிய கம்ப்யூட்டரில் இப்போதெல்லாம் குறைந்தது நான்கு யு.எஸ்.பி. போர்ட்கள் அமைக்கப்படுகின்றன. இவற்றில் இணைக்கப்படும் சாதனங்களுக்கு, இவை கம்ப்யூட்டருக்குக் கிடைக்கும் மின் சக்தியை வழங்குகின்றன. இந்த சாதனங்களுக்கு வெளியே இருந்து மின்சக்தி இணைப்பு இல்லை எனில், கம்ப்யூட்டரிலிருந்துதான் பவர் தரப்படுகிறது. இதில் என்ன பிரச்னை என்றால், ஒவ்வொரு யு.எஸ்.பி. போர்ட்டும் அதிக பட்சம் 500 மில்லி ஆம்பியர் கரண்ட் தான் தர முடியும். கம்ப்யூட்டர் ஒன்றுடன், யு.எஸ்.பி. போர்ட் வழியாக, ஒரு சாதனம்இணைக்கப்பட்டால், இதில் பிரச்னை ஏற்பட வழியில்லை. யு.எஸ்.பி. ஹப் (பல யு.எஸ்.பி.போர்ட் கொண்ட ஒரு சாதனம் - மல்ட்டிபிள் ப்ளக் போல) ஒன்றை இணைத்து, அதில் பல சாதனங்களை இணைத்தால், அங்கு பிரச்னை எழ வாய்ப்புண்டு. இதற்குப் பதிலாக, ஒவ்வொரு யு.எஸ்.பி.போர்ட்டிலும் இணைக்கப்படும் சாதனங்கள் இயங்க எவ்வளவு மின் சக்தி தேவைப்படுகிறது என்பதனை நாம் அறிந்து கொண்டால், பிரச்னையை ஓரளவிற்குச் சமாளிக்கலாம். இதனை அறிந்து கொள்ள நமக்கு இலவசமாக USBdview என்ற ஒரு சாப்ட்வேர் கிடைக்கிறது. http://www.nirsoft.net /utils/ sb_devices_view.html என்ற முகவரியில் உள்ள தளத்தில் இதனைப் பெறலாம். இந்த சாப்ட்வேர் தொகுப்பினை டவுண்லோட் செய்து, கம்ப்யூட்டரில் இயக்கவும். இதில் உள்ள பல அப்ளிகேஷன்களில், பவர் என்பதுவும் ஒன்று. இதில் கிடைக்கும் பட்டியலில் கீழாக இது கிடைக்கும். இதில் நாம் காணவேண்டிய சாதனத்தினைக் கிளிக் செய்தால், அதற்கான தேவைப்படும் மின் சக்தி குறித்த தகவல் கிடைக்கும். இணைக்கப்படும் ஒவ்வொரு சாதனத்திற்கும் மின்சக்தி தேவையில்லை. இருப்பினும் அனைத்து இணைக்கப்பட்ட சாதனத்திற்கும் தேவைப்படும் மின்சக்தி குறித்த தகவல் காட்டப்படுகிறது. இந்த தகவல்களைக் கொண்டு நாம் கிடைக்கும் மின்சக்தியின் அளவுக்கேற்றாற்போல, யு.எஸ்.பி.போர்ட்டில் சாதனங்களை இணைத்துக் கொள்ளலாம்.

நன்றி : தினமலர் கம்ப்யூட்டர் மலர்

No comments:

Post a Comment