Monday, January 17, 2011

Suthanthira ilavasa menporul ( சுதந்திர இலவச மென்பொருள் ) டாப் 2 வீடியோ எடிட்டிங்


சுதந்திர இலவச மென்பொருளில் நாம் இன்று பார்க்க இருப்பது
வீடியோ எடிட்டிங் செய்ய உதவும் மென்பொருள் இதைப்பற்றித்
தான் இந்தப்பதிவு.

Suthanthira ilavasa menporul  டாப் 10 – ல் இரண்டாம் இடம்
பிடித்திருக்கும் மென்பொருள் வீடியோ எடிட்டிங் வேலை செய்ய
உதவுகிறது. மென்பொருளின் பெயர் அவேய்ட் மக்ஸ் (Avide mux ).
சாதாரணமாக வீடியோ எடிட்டிங் செய்ய வேண்டும் என்றால்
பெரிய அளவில் காசு கொடுத்து வீடியோ எடிட்டிங் மென்பொருள்
வாங்குவோம் ஆனால் எளிய முறையில் இலவசமாக கிடைக்கும்
இந்த மென்பொருளை பயன்படுத்தலாம். வீடியோவில் விரும்பிய
பகுதியை வெட்டி (Cut) தனிப்பகுதியாக சேமித்து வைக்கலாம்.
வீடியோவில் இருக்கும் கலர், பிரைட்னஸ் , போன்றவற்றை
மாற்றலாம். வீடியோவிற்கு விரும்பிய ஆடியோவை சேர்க்கலாம்.

AVI, DVD , MPEG ,MP4  மற்றும் பல Format- களுக்கு துணைபுரிகிறது.
Noise இருந்தால் அதையும் நீக்கலாம்.வீடியோவிற்கு Title
தேவையென்றால் அதுவும் சேர்த்துக்கொள்ளலம். வீடியோவின்
நீள அகலங்களை நாம் விரும்பியபடி மாற்றி அமைக்கலாம்.
இப்படி  வீடியோ எடிட்டிங் வேலைகளை செய்ய உதவும் இந்த
இலவச மென்பொருள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
Download 

நன்றி : விண்மணி

No comments:

Post a Comment