இந்த ஆட் ஆன் தொகுப்பின் பெயர் Theme Font and Size Changer.
இதன் தளம் (https://addons.mozilla.org/enUS/firefox/addon/162063/) சென்று, இதனை இன்ஸ்டால் செய்துவிட்டால், பயர்பாக்ஸ் ஸ்டேட்டஸ் பாரில், அல்லது ஆட் ஆன் பாரில் (பயர்பாக்ஸ் பதிப்பு 4) ஐகான் ஒன்று அமைக்கப்படுகிறது. இதன் மீது லெப்ட் கிளிக் செய்தால், எளிய மெனு ஒன்று திறக்கப்படுகிறது. இதில் பல கீழ் விரி மெனுக்கள் தரப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் நாம் விரும்பும் எழுத்து வகையை, விரும்பும் அளவில், பயர்பாக்ஸின் இடை முகத்திற்கென அமைக்கலாம். இந்த தொகுப்பு எழுத்து வகைகளுக்கான தகவல்களை, நேரடியாக விண்டோஸ் சிஸ்டத்தின் பாண்ட்ஸ் போல்டரிலிருந்து எடுத்துக் கொள்கிறது. இதில் உள்ள Normal என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், பிரவுசரின் தொடக்கத்தில் தரப்பட்ட எழுத்து வகை மீண்டும் அமைக்கப்படுகிறது. எழுத்து வகை மாறிய பின்னர், அது பிரவுசரின் மெனுக்கள், டூல்பார்கள், விண்டோஸ் மற்றும் பிரவுசரின் கிராபிக்ஸ் யூசர் இன்டர்பேஸ் அமைப்புகளை மாற்றுகிறது. இணைய தளங்களின் எழுத்துக் களையோ, மற்ற அம்சங்களையோ மாற்றுவதில்லை. இந்த எக்ஸ்டன்ஷன் இயக்கத்தினை மொஸில்லாவின் இமெயில் கிளையண்ட் புரோகிராமான தண்டர்பேர்ட் தொகுப்பிலும் அமைக்கலாம். தண்டர்பேர்ட் தொகுப்பிற்கு மட்டும் அமைக்க விரும்புவர்கள் அதற்கான ஆட் ஆன் தொகுப்பினை https://addons.mozilla.org/enUS/thunderbird/addon/ 162063/ என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நன்றி : தினமலர் கம்ப்யூட்டர் மலர்
No comments:
Post a Comment