நமது வேலைகளுக்கிடையே அன்றாட வரவு செலவுகளை கணக்கிடுவது சற்று சிரமமான காரியமே.நமக்கே தெரியாமல் சில வழிகளில் நாம் பணத்தை செலவிடுவது உண்டு.இவையெல்லாம் வரவு செலவுகளை கணக்கிடாமல் கண்டுபிடிப்பது கஷ்டம.
மேலும் நாம் மாதா மாதம் பல வகையான பில்களை கட்ட வேண்டியது உண்டு.உதாரணமாக கடன் அட்டை தொகை,மாதா வாடகை,மின்சார கட்டணம் மற்றும் பல உண்டு.இவைகளை நாம் சரியாக நினைவு வைத்திருந்து கட்ட வேண்டும் மற்றும் இவைகளையும் நாம் கணக்கிட வேண்டும்.
Buxfer என்ற வலைத்தளம் பல வழிகளில் நமக்கு உதவுகிறது.நாம் அன்றாடம் செய்யும் செலவுகளையும் , வரவுகளையும் இதில் எளிதாக பதிந்து கொள்ளலாம்.இந்த தளத்திற்கு சென்று இலவச கணக்கை துவங்கினால் போதும்.
மேலும் மாதா மாதம் கட்ட வேண்டிய பில்களை பதிவு செய்து கொண்டால் அந்த தேதிக்கு நமக்கு மெயில் அனுப்பி நினைவு படுத்துகிறது.உங்கள் வரவு செலவுகளை தனிதனியாக வகைபடுத்திகொள்ளலாம்.இதன் மூலம் எளிதாக எதற்கு அதிகமாக செலவுகளை செய்தோம் என எளிதாக காணலாம்.உதாரணமாக நீங்கள் அந்த மாதத்தில் காய்கறிகளுக்காக மற்றும் பொழுதுபோக்கிற்க்காக எவ்வளவு செலவு செய்தோம் என்பதை தனியாக காணலாம்.
வரவு செலவுகளை நமது இந்திய ரூபாய் மதிப்பில் கணக்கிட மாற்றி கொள்ளலாம்.மேலும் பட்ஜெட் போட்டு கொள்ளும் வசதியும் உள்ளது.
வீட்டு செலவுகளை கணக்கிட எளிதில் கணக்கிட உதவுவது மட்டுமில்லாமல் மாதவாரியாக வரவு செலவுகளை பட்டியல் இட்டு காட்டுகிறது.பயன்படுத்தி பாருங்கள் மிக உதவியாக இருக்கும்.
நன்றி : BROWSEALL BLOG
No comments:
Post a Comment