Monday, January 17, 2011

Suthanthira menporul டாப் 3 – போட்டோஷாப் -க்கு இணையான இலவச மென்பொருள்.


புகைப்படங்களை வைத்து செய்யும் அனைத்து வேலைகளுக்கும் நாம்
பயன்படுத்தும் போட்டோஷாப் மென்பொருளுக்கு இணையான
மற்றொரு இலவச மென்பொருள் உள்ளது இதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.

புகைப்படங்களின் நீள அகலத்தை மாற்றுவதில் தொடங்கி கருப்பு
வெள்ளை புகைப்படத்தை கலர் புகைப்படமாக மாற்றுவது வரை
அனைத்து புகைப்பட வேலைகளுக்கும் அடோப் நிறுவனத்தில்
இருந்து வெளிவரும் வரும் போட்டோஷாப் மென்பொருளைத்தான்
பயன்படுத்துகிறோம் ஆனால் இந்த கட்டண மென்பொருளுக்கு
மத்தியில் இதில் செய்யும் அத்தனை வேலைகளையும் செய்ய
ஒரு இலவச மென்பொருள் உள்ளது.

Suthanthira menporul  டாப் 3ல் அதிகமான மக்கள் பயன்படுத்தும்
இந்த மென்பொருளின் பெயர் Gimp. இலவசமாக கிடைக்கும் இந்த
மென்பொருளை பயன்படுத்தி புகைப்படத்தில் செய்யப்படும் அனைத்து
வேலைகளையும் செய்யலாம். குறிப்பாக போட்டோஷாப் மென்பொருள்
உருவாக்கும் PSD கோப்பை கூட நாம் இந்த மென்பொருளில்
பயன்படுத்தலாம். புகைப்பட வேலைகள் செய்யும் அனைவருக்கும்
இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும். Download என்பதை சொடுக்கி
மென்பொருளை இலவசமாக தரவிரக்கி பயன்படுத்தலாம்.
Download

நன்றி : விண்மணி

No comments:

Post a Comment